ஐரோப்பாவில் கடும் வெப்பம்

பிரான்ஸில் வெயில் உக்கிரமாக இருப்பதால் அங்குள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்று அங்கு வெப்பம் நாற்பது டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பாரிஸுக்குத் தெற்கே உள்ள எஸ்ஸோன் வட்டாரத்தில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் போதுமான குளிரூட்டல் வசதி இல்லை என்பது அதற்குக் காரணம்.

இன்று வெள்ளிக்கிழமை பாரிஸின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திலும் இந்த அளவு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும், ஜெர்மனியிலும், இத்தாலியிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே உள்ளது.

எனினும் ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதனன்று வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

சாஹாரா பாலைவனத்திலிருந்து வழக்கத்தை விடக் கடுமையாக வெப்பக் காற்று வீசுவதால் ஐரோப்பாவின் வெப்பநிலை இவ்வாறு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு சம்பவத்தை வைத்து புவி வெப்பமயமாதல்தான் காரணமென கூற முடியாது என்றாலும், இயற்கையாகவே அனல்காற்று வீசலாம் என்றாலும், தொடர்ச்சியாக வெப்பம் அதிகரிப்பது, அனல்காற்று வீசுவது இதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம். 19ஆம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளின் தரவுகளை ஆராய்ந்தால், தொழில்மயமாக்கலுக்கு பின் பூமியின் மேற்புற வெப்பம் ஒரு டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த கால தரவுகளுக்கமைய 2003 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அதிகரித்த வெப்பத்தின் காரணமான 14,000 மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை