அம்பாறையில் இலவச சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்

அமைச்சர் ஹர்ஷ பிரதம அதிதி

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசாங்கத்தின் நன்கொடையில் 1990 சுவசெரிய அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பியூலன்ஸ் சேவை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (23) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து, அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே, திகாமடுல்ல பாராஞமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்,ஐ.எம்.மன்சூர், மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க, மேலதிக அரசாங்க அதிபர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரசியல் பிரமுகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாடுபூராகவும் 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டிகள் 297 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தி அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 27 அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சவளக்கடை குறூப் நிருபர்

Tue, 06/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை