நாட்டுப்பற்றுள்ள சக்திகளுடன் இணைந்து செயற்படத் தயார்

மகா சங்கத்தினரின் வழிகாட்டலை ஏற்று செயற்படவும் தயாராக உள்ளேன்

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பவாத அரசியலை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். மகாசங்கத்தினரின் வழிகாட்டல்களை ஏற்று அவர்களின் ஆலோசனைப்படி எதிர்காலத்தில் செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியது தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர்

நாட்டில் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை மாறி வரும் நிலையில் கடந்த 3 ஆம் திகதி காலை முதல் நாடுபூராவும் கடும் ஸ்திரமற்ற நிலையும் மோதல் உருவாகும் போக்கும் காணப்பட்டதை அவதானித்தேன்.இந்த நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மூன்று விடயங்களின் அடிப்படையில் அமைச்சுப் பதவிகளை கைவிட முடிவு செய்தனர்.

சிறுகுழுவின் இந்த நடவடிக்கையால் முழு முஸ்லிம் சமூகத்தினதும் சொத்துக்கள்,உயிர் என்பவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் இடையூறு செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையிலே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி,பொருளாதார செயற்பாடுகளை இடையூறின்றி முன்னெடுக்கவும் பொது மக்களின் அன்றாட பணிகளை தடையின்றி முன்னெடுக்கவும் இடமளிக்கும் நோக்கத்துடனே நாம் பதவி விலகினோம்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க நாட்டுப்பற்றுள்ள சக்திகளுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறேன். மகாசங்கத்தினரின் வழிகாட்டளை ஏற்று அவர்களின் ஆலோசனைப் படி எதிர்காலத்தில் செயற்பட தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(பா)

 

Fri, 06/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை