அக்கரைப்பற்று ஜங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியன்

“கோடீஸ்வரன் றொபின் - 2019” மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று ஜங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் (26) காலை முதல் மாலை வரை இடம்பெற்ற “கோடீஸ்வரன் றொபின் - 2019” கிரிக்கெட் வெற்றிக்கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் அணியினை எதிர்கொண்ட ஜங்ஸ்டார் அணி 8 விக்கெட்டினால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பெயரில் உருவாக்கப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 8 அணிகள் மோதிக்கொண்டன.

6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான இச்சுற்றுப்போட்டி தொடரின் இறுதிப்போட்டிக்கு அக்கரைப்பற்று ஜங் ஸ்டார் மற்றும் ஜொலிபோய்ஸ் அணிகள் தெரிவு செய்யப்பட்டன. இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜொலிபோய்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த துடுப்பாட்டத்தால் 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜங் ஸ்டார் அணி 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 5.4 ஓவர்களில் 58 ஓட்டங்களை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

தொடரின் தொடர் ஆட்டநாயகன் விருதை ஜொலிபோய்ஸ் அணி வீரர் எஸ்.தினுஜன் பெற்றுக்கொள்ள ஆட்ட நாயகன் விருதை ஜங்ஸ்டார் அணி வீரர் ரி.சுஜிந்தன் தட்டிச் சென்றார்.

சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட ஜங் ஸ்டார் அணிக்கும் இரண்டாம் நிலையை பெற்ற ஜொலிபோய்ஸ் அணிக்குமான பதங்கங்கள் அதிதிகளால் அணிவிக்கப்பட்டதுடன் வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசும் பிரதம அதிதி உள்ளிட்டவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரின் சொந்த நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சகல விளையாட்டுக்கழகங்களுக்குமான சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களும் கையளிக்கப்பட்டது.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை