மட்டக்களப்பில் இயல்புவாழ்க்கையை மீளக்கட்டி எழுப்ப விளையாட்டு நிகழ்வுகளை நடாத்த நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் குண்டுவெடிப்புசம்பவத்தையடுத்து குலைந்து போயுள்ள இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டிஎழுப்பகூடியவாறு மக்களை ஊக்கப்படுத்தும்சிறந்த விளையாட்டு பொழுது போக்கு நிகழ்வுகளை நடாத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன .

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டவிளையாட்டுஅபிவிருத்தி சபையின் யின் தலைவருமான மாணிக்கம் உதயகுமாரின் வழிகாட்டலில் இந்த விசேட விளையாட்டு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன

இதன்படி மக்கள்மத்தியில் வழமையான இயல்பு வாழ்க்கைக்குச் செல்லும் மனோ நிலையை ஊக்கப்படுத்துதலைநோக்காகக்கொண்டு உதைபந்தாட்டம், கிரிக்கெட், கூடைப்பந்தாட்வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் பாரம்பரிய விளயாட்டு நிகழ்வுகளினை மட்டக்களப்பு நகரில் நடாத்த மாவட்டவிளையாட்டுஅபிவிருத்தி சபையின் விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டவிளையாட்டுஅபிவிருத்தி சபையின் யின் தலைவருமான உதயகுமார் தெரிவித்தார்.

இந்த விசேடகூட்டத்தின்போது இச்சபை ஆரம்பித்த 1 9 9 3 ம் வருடம் முதல் சேகரிக்கப்பட்டு வங்கி கணக்கிலிடப்பட்டிருந்து வெளிநாடுகளில் வசித்த அங்கத்தவர்களால் சமர்பிக்கப்படாததால் பெறமுடியாமலிந்த சுமார் 1 3 இலட்சம் ரூபா நிதிக்கான ஆவனங்கள் ஐக்கிய இராஜியத்தில் வசித்த முன்னாள் செயலாளர் சில்வஸ்டரால் அண்மையில் உத்தியோக பூர்வமாக அரசாங்க அதிபர் முன்னிலையில் தற்போதைய செயலாளரும் விளையாட்டு மாவட்ட உத்தியோகத்தருமான வீ.ஈஸ்பரனிடம் ஒப்ப டைக் கப்பட்டது.

(மட்டக்களப்பு சுழற்சிநிருபர் )

 

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை