ஐ.நா பயங்கரவாத பட்டியலில் மசூர் அஸாரின் பெயர் சேர்ப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்திய குண்டு தாக்குதலின் பின்னணியில் இருந்த போராட்டக் குழு ஒன்றின் தலைவரை ஐ.நா பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில் இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரில் 40 துருப்புகள் கொல்லப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய ஜெயிஷே முஹமது அமைப்பின் தலைவர் மசூர் அஸரே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இவரை பங்கரவாத பட்டியலில் சேர்ப்பதற்கு சீனா தனது ஆட்சேபனையை கைவிட்டதை அடுத்தே ஐ.நா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனை ஒரு இராஜதந்திர வெற்றியாக இந்தியா கொண்டாடுகிறது.

இந்நிலையில் மசூத் அஸார் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைக்கு முகம்கொடுத்துள்ளார். இந்த தடைகள் உடன் அமுலுக்கு வரும் என்று பாகிஸ்தான் அறிவித்ததோடு இந்தியாவும் இலக்கு வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

மசூர் அஸாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் முன்மொழிவை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கொண்டுவந்தன. இதனை 2016, 2017 ஆம் ஆண்டுகளில் நிராகரித்த பாகிஸ்தானின் நீண்ட கால நட்பு நாடான சீனா தற்போது இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை