மெய்க்காவலரை திருமணம் புரிந்தார் தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னர் தனது மெய்க்காலவர் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரை எதிர்பாராத விதத்தில் திருமணம் புரிந்து அவரை ராணியாக்கியுள்ளார்.

மன்னர் மஹா வஜிராலங்கொன் நாளை சனிக்கழமை முடிசூடிக்கொண்டு தனது பதவியை நிரந்தரமாக ஏற்கவிருக்கும் நிலையிலேயே அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது அன்புக்குரிய தந்தையான மன்னர் புமிபோல் அதுல்யதேஜ் 2016 ஆம் ஆண்டு மரணமடைந்ததை அடுத்தே 66 வயதான வஜிராலங்கொன் உத்தியோகபூர்வ மன்னராக பதவி ஏற்கவுள்ளார்.

ஏழு குழந்தைகளுக்குத் தந்தையான அவர் இதற்கு முன் மூன்று முறை திருமணம் முடித்து விவாகரத்து பெற்றவராவார்.

இந்நிலையில் சட்டப்பூர்வமாக, மன்னர் சுதிடாவை மணம் முடித்துள்ளதாக அரண்மனை அறிக்கை குறிப்பிட்டது. அவர் மன்னர் குடும்பத்தில் அங்கம் பெறுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. திருமண நிகழ்வின் காட்டிசிகள் தொலைக்காட்சிகளில் கடந்த புதன்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

தாய் ஏர்வேசில் விமான பணிப்பெண்ணாக இருந்த 40 வயது சுதிதா தித்ஜெய்யை கடந்த 2014ஆம் ஆண்டு வஜிராலங்கொன் தனது பாதுகாப்பு குழுவின் துணை தளபதியாக நியமித்தார். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக ஊடகங்கள் அப்போதில் இருந்தே கூறிவந்தது.

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை