தாய்லாந்து புதிய மன்னராக முடிசூடினார் வஜ்ராலங்கோன்

தாய்லந்து மன்னர் மகா வஜ்ராலங்கோன் அதிகாரபூர்வமாக முடிசூடிக்கொண்டுள்ளார்.

விரிவான சமயச் சடங்குகளுக்கிடையே அவரது முடிசூட்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மன்னரின் முடிசூட்டு விழா பெளத்த சமயச் சடங்குகளுக்கேற்ப நடைபெற்றது.

மன்னர் புனித நீரில் குளித்து, பின்னர் 8 திசைகளையும் நோக்கும் அரியணையில் அமர்ந்தார். அரியணையைச் சுற்றி நிற்கும் 8 பேர் மன்னர் மீது புனித நீரை ஊற்றினர். இதுவே, மிக முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது.

இத்தனை அம்சங்களைக் கொண்ட நிகழ்வு இதற்கு முன்னர், மன்னர் பூமிப்போன் அதுல்யதேஜின் முடிசூட்டு விழாவில் நடைபெற்றது.

முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து நேற்று கொண்டாட்ட ஊர்வலம் நடைபெற்றது.

தாய்லாந்து அரசமைப்பு சட்டம் முடியாட்சியை கொண்டிருந்தாலும், அரச குடும்பத்திற்கு தாய்லாந்து மக்கள் அதிக மதிப்பு அளிக்கின்றனர். அரச குடும்பத்திற்கு கணிசமான அதிகாரமும் உள்ளது.

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை