எரிமலைக்குள் விழுந்தவர் மீட்பு

ஹவாயில் உள்ள எரிமலை ஒன்றினுள் 70அடி ஆழத்தில் விழுந்த அமெரிக்க இராணுவ வீரர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹவாய் எரிமலை தேசிய பூங்காவில் கீல்வேய கல்டெரா என்ற எரிமலையை பார்வையிட்ட போது தவறி உள்ளே விழுந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இராணுவ வீரர் பாதுகாப்பு வேலியைத் தாண்டி எரிமலையை எட்டிப் பார்த்த போது தவறி விழுந்ததாகவும், அவர் எரிமலைக்குள் இருந்த செங்குத்தான பாறையைப் பிடித்துக் கொண்டதாகவும் அதிகாரிகள் கூறினர். பாறையைப் பிடித்துக்கொண்டதால் எரிமலைக் குழம்பிற்குள் விழாமல் அவர் தப்பித்துள்ளார்.

மீட்கப்பட்ட வீரருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை