சனி, ஞாயிறு திருப்பலி பூஜைகளை நடத்த வேண்டாம்

தேவாலயங்களில் நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி பூஜைகளை நடத்தவேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் சகல பங்குத் தந்தையர்களுக்கும் பேராயரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று பேராயர் இல்லம் தெரிவித்தது. பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டே அவசரமாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை நேற்றுமுன்தினம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மே 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சகல தேவாலயங்களிலும் திருப்பலிகளை நிறைவேற்ற அனுமதி வழங்கியிருந்தார். எனினும் பல திருப்பலி பூஜைகள் இடம்பெறுகின்ற ஆலயங்களில் அதனை ஒன்று அல்லது இரண்டாக மட்டுப்படுத்துமாறும் அவர் பங்குத் தந்தையர்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் விசேட அறிவித்தலொன்றின் மூலம் நாளையும் நாளை மறுதினமும் திருப்பலி பூஜைகளை நடத்தவேண்டாமென அனைத்து பங்குத் தந்தையர்களுக்கும் பேராயர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை