ஒரு வாரம் தாமதித்து பாடசாலைகளை திறக்க வேண்டும்

மல்வத்து, அஸ்கிரிய  பீடாதிபதிகள் கோரிக்கை

நாட்டின் பாதுகாப்பு நிலைமை மேலும் சீரான பின்னர் பாடசாலைகள் திறக்கப்படவேண்டும். எனவே இன்னும் ஒரு வாரத்தின் பின்னர் அரசாங்கம் பாடசாலைகளை திறந்திருக்க வேண்டும் என்று மல்வத்தை பீடாதிபதி வண ஸ்ரீ சித்தார்ந்த சுமங்கள தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அத்துடன் நாட்டின் தேசிய பாதுகாப்பு நிலையைப்

பற்றிய கூட்டு பிரகடனமொன்றை ஜனாதிபதி பிரதமர், அமைச்சரவை மற்றும் பாதுகாப்பு சபையின் அங்கத்தவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். அவர்கள் ஒன்றாக கூடிக் கலந்துரையாடி தீர்க்கமாக முடிவெடுத்த பின்னரே அவ்வாறான கூட்டு பிரகடனத்தை வெளியிட்டிருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார். பாடசாலையின் ஒரு பிரிவினரை முதலிலும், இன்னொரு பிரிவினரை பின்னரும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருப்பதன் மூலம் அரசாங்கம் பாதுகாப்பு தொடர்பாக முழுமையான தீர்மானத்துக்கு வர முடியாமல் இருப்பதையே காட்டுகிறது.

 எனவே பாதுகாப்பு தொடர்பான குழப்ப நிலை முற்றாக நீங்கியதன் பின்னரே பாடசாலைகளை திறந்திருக்க வேண்டும். அதுவே பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருந்திருக்கும். அத்துடன் அனைத்து பாடசாலைகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட வேண்டும் என்று மல்வத்தை பீடாதிபதி மேலும் கூறினார். இலங்கை அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் சங்கமும் சிங்கள அபி. அமைப்பும் கண்டியில் மல்வத்தை பீடாதிபதியை நேற்று சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

 

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை