600 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றம்

200 இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் உட்பட

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் 200 இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் உட்பட 600 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மதகுருமார்கள் இலங்கைக்கு சட்டரீதியாக வந்துள்ளபோதும் தாக்குதல்களின் பின்னரான பாதுகாப்பு சூழலால் அவர்கள் வீசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அவர்களிடம் உரிய தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், அவர்கள் நாட்டைவிட்டு வெ ளியேற்றப்பட்டதாக உள்விவகார அமைச்சர் வஜிர அபயவர்தன தெரிவித்தார்.

"நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வீசா நடைமுறையை இறுக்கியிருப்பதுடன், மத ரீதியான போதகர்களுக்கு வழங்கும் வீசாவை மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம்" என அவர் குறிப்பிட்டார். "நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 200 பேர் இஸ்லாமிய அறிஞர்களாகும்" எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை அமைச்சர் வெளிப்படுத்தாதபோதும், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் ஆகியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் வீசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருந்த நிலையில் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"நாட்டில் உள்ள பல மத நிறுவனங்கள் நீண்டகாலமாக வெளிநாட்டிலிருந்து மத போதகர்களை அழைத்துவருகின்றன. எனினும் அண்மைக் காலத்தில் காளான் போன்ற பல முளைத்துள்ளன.

 அவை தொடர்பில் நாம் தற்பொழுது கவனம் செலுத்தியுள்ளோம்" என்றார். நாட்டுக்கு வரும் வெளிநாட்டு மதகுருமார் உள்ளூரில் உள்ளவர்களுக்கு அடிப்படைவாதக் கருத்துக்களை புகட்டி ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற தாக்குதல்களை நடத்த தூண்டலாம் என்ற அச்சம் அரசாங்கத்துக்குக் காணப் படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை