தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது

 எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. தேர்தலுக்கு முன்னர் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பலர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பினர் தற்பொழுது ஈடுபட்டிருப்பதாகவும் ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னரான நிலைமைகள் குறித்தும், நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்தும் இந்த செவ்வியில் ஜனாதிபதி கருத்துக்களைப் பரிமாறியிருந்தார்.

"தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது, எனவே தேர்தல்களுக்கு முன்னர் நான் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவேன். அத்துடன் பயங்கரவாதத்தையும் நான் முற்றாக ஒழிப்பேன்"

ஏதேனும் பயிற்சி பெறுவதற்காக சென்று இருக்கலாம் அல்லது சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதற்காக அவர்கள் இந்தியாவுக்கு சென்று இருக்கலாம் என்று கூறி இருந்தார்.

இதற்கு இந்தியா மறுத்துள்ளது. இலங்கை பயங்கரவாதிகள் இந்தியா வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெறவில்லை என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,இலங்கையில் தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து காஷ்மீருக்கு இந்த ஆண்டில் வருகை தந்த இலங்கையை சேர்ந்த 12 பேர்களின் ஆவணங்கள் மறுபடியும் சரிபார்க்கப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் யாரும் இங்கு வரவில்லை என்று இந்திய பாதுகாப்பு முகமைகள் தெரிவித்துள்ளன.வேறு பெயர்களில் பயங்கரவாதிகள் இந்தியா வந்து இருக்க வாய்ப்பு உள்ளதால் இலங்கை அரசு ஆதாரங்களை வழங்கினால் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.

 

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை