வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட 17 மாவட்டங்களில் கடும் வரட்சி

3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் வரட்சி நிலவுவதாகவும் வரட்சியினால் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை புத்தளம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கடும் வரட்சி நிலவுவதாகவும் மாவட்டத்திலுள்ள எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 9960 குடும்பங்களைச் சேர்ந்த 34,673 பேர் இங்கு வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந் நிலையம் தெரிவித்துள்ளது. 

வரட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றியுள்ளதுடன், மேய்ச்சல் தரைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். 

அதேவேளை, வரட்சி காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 13,769 குடும்பங்களைச் சேர்ந்த 46,041 பேரும் மன்னார் மாவட்டத்தில் 16,243 குடும்பங்களைச் சேர்ந்த 56,324 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,770 குடும்பங்களைச் ​சேர்ந்த 40,107 பேரும் கிழக்கில் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 16,382 குடும்பங்களைச் சேர்ந்த 54,479 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. (ஸ)  

(லோரன்ஸ் செல்வநாயகம்) 

Tue, 05/21/2019 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை