‘கெட்வோக்’ நிகழ்ச்சியில் ஆண் மொடல் உயிரிழப்பு

பிரேசிலில் நடைபெற்ற ஆடை அலங்கார நிகழ்ச்சி ஒன்றில் ‘கெட்வோக்’ நடையின்போது மயங்கி விழுந்த ஆண் மொடல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவோ போலோ நகரில் ஒக்ஸா வர்த்தகக் குறிக்காக நடைபெற்ற நிகழ்ச்சியின்போதே டெலஸ் சோரஸ் கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதும் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல்போனது.

இது நிகழ்ச்சியின் ஓர் அங்கம் என்றே பார்வையாளர்கள் ஆரம்பத்தில் நினைத்தனர். அந்த மொடல் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரது உதவிக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்ததோடு அவர் உடன் அரங்கில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டார்.

அவர் உயிரிழந்ததை ஏற்பாட்டாளர்கள் ட்விட்டர் மூலம் உறுதி செய்தபோதும் அது தொடர்பில் மேலதிக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை