கோத்தாவுக்கு எதிரான வழக்கு; கலிபோர்னிய நீதிமன்றில் பரிசீலனை

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வழக்கு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தால் ஏப்ரல் 15 ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கோத்தாபய ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மரணத்திற்கான இழப்பீட்டைப் பெற்றுக்ெகாள்ளும் முகமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கை லசந்தவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க ஏப்ரல் 04 ஆம் திகதியன்று தாக்கல் செய்திருந்தார்.

மேற்படி வழக்கு பல வருடங்களாக இலங்கை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே இருந்து வருவதாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

"கடந்த 10 வருடங்களுக்கு மேல் இலங்கை அதிகாரிகள் லசந்தவின் கொடூரமான கொலை குறித்து தீர்மானம் எடுக்கத் தவறிவிட்டனர்," என ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவின் மணிலாவிலுள்ள ஆசியாவுக்கான நிகழ்ச்சி இணைப்பாளர் ஸ்டீபன் பட்லர் தெரிவித்தார். "சிலவேளைகளில் அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் வழக்கு இலங்கை அதிகாரிகளை விசாரணைகளைத் துரிதப்படுத்தலாம்," என்றும் அவர் கூறினார். 'த சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்று வந்த மோசடிகள் தொடர்பில் எழுதி வந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதியன்று கொலை செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

Wed, 04/17/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக