நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் 2025ஆம் ஆண்டளவில் வீடுகள்

2025 ஆம் ஆண்டாகும் போது 20,000 வீடுகளை நிர்மாணித்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் நிழலினை பெற்றுக் கொடுப்போம் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் தெனிய பிரதேசத்தில் சகலருக்கும் நிழல் உதாகம திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள காமினி பொன்சேகா கம மாதிரிக் கிராமத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட் கிழமை (15) இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டிலுள்ள சிறிய 38,000 கிராமங்களிலும் ஒவ்வொருவருடமும் 25 வீடுகள் வீதம் நிர்மாணிப்பதாக 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஸ மக்களுக்கு வாக்குறுதியளித்தார். இருந்தும் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்று இரண்டு தடவைகள் ருந்தும் அவர் இந்த வாக்குறுதியினை நிறைவேற்றினாரா? என்பதினை நான் நாட்டு மக்களிடம் கேட்க விரும்புகிறேன்.

நாம் ஆட்சிக்கு வந்ததன் பின்பு எமது நல்லாட்சி அரசாங்கம் 2025 ஆம் ஆண்டாகும் போது நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் நிழலினை பெற்றுக் கொடுப்பதாக மக்களுடன் சமூக ஒப்பந்தம் ஒன்றினை மேற் கொண்டோம். இது கடந்த பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் நாம் ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்களுக்கு வழங்கப்பட்டவாக்குறுதிகள் அல்ல.

எமதுநாட்டில் வீடுகள் இல்லாமல் வசித்துவரும் ஏழை, உதவிகள் பெறமுடியாத மக்களுக்காக முன்வைத்த திட்டமாகும். இதனை நாம் நான்கு கட்டங்களாக முன்னெடுத்து வந்து 20,000 வீடுகளை நிர்மாணித்து 2025 ஆம் ஆண்டாகும் போது நாட்டில் வீடில்லாத சகலருக்கும் வீடுகளை நிர்மாணித்து நிழலினை பெற்றுக் கொடுப்போம். தேர்தல் காலங்களில் மக்களுக்கு அளவிற்கு அதிகமான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றாலும் அவற்றைநிறைவேற்றுவதற்கு கடந்த ஆட்சியாளர்களுக்கு எவ்விததேவையும் இருக்கவில்லை என்றார்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை