27 மருந்துகளுக்கு விலையை குறைக்க அரசு நடவடிக்ைக

சுகாதார அமைச்சு மேலும் 27 மருந்துகளுக்கான விலைகளை குறைப்பதறகு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தற்போது சந்தையில் நடைமுறையிலுள்ள மருந்துப் பொருட்களின் விலைகளை ஆய்வுசெய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் அந்நடவடிக்கைகள் நிறைவுபெறுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய மருந்துப்பொருட்கள் செயற்பாட்டு அதிகார சபையின் விலைக்கடடுப்பாட்டுக் குழு மூலம் மருந்துப் பொருட்களின் விலைகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி 27 மருந்துகளின் புற்றுநோய்க்கான மருந்துகளும் உள்ளடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் நோயாளர்களின் நன்மை கருதி இதுவரை 73 மருந்துகளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சானது முதலாவதுகட்டமாக 48 மருந்துப்பொருட்களுக்கான விலைகளையும் 2ம் கட்டமாக 25 மருந்துப் பொருட்களுக்கான விலைகளையும் குறைத்துள்ளது. இதனால் 2017ம் ஆண்டு 600 மில்லியன் ரூபா நோயாளர்களுக்கு மீதமாகவுள்ளது. தற்போது மேலும் 27 மருந்துகளுக்கான விலைகளை குறைக்கவுள்ளதுடன் அதனையடுத்து தனியார்துறை ஆஸ்பத்திரிகளிலும் கட்டணங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தபப்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை