மூன்று பேரின் குழந்தை கிரேக்கத்தில் பிறந்தது

கிரேக்க மற்றும் ஸ்பெயின் நாட்டு மருத்துவர் மலட்டுத் தன்மை கொண்ட பெண் ஒருவருக்கு மூவரைக் கொண்டு கருவுறச் செய்துள்ளனர். இந்த ஆண் குழந்தை 2.9 கி.கி. எடையுடன் கடந்த செவ்வாய்க்கிழமை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மலட்டுத்தன்மை கொண்ட தம்பதிகளுக்கு உதவும் இந்த முயற்சி மூலம் மருத்துவ வரலாற்றில் சாதனை படைத்திருப்பதாக அந்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த செயற்பாடு ஒழுக்க விழுமியங்கள் பற்றிய கேள்வியை எழுப்புவதாகவும் இது தடுக்கப்பட வேண்டும் என்றும் சில நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

தாயின் ஒரு முட்டை, தந்தையின் விந்தணு மற்றும் நன்கொடை பெண்ணிடம் இருந்து மற்றொரு முட்டையை பயன்படுத்தி செயற்கை கருத்தரித்தல் முறையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தாயிடம் இருந்து குழந்தைக்கு கடத்தப்படும் ஆட்கொல்லி பரம்பரை நோய்களை தடுக்க உதவுகிறது.

Fri, 04/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை