பிரெக்சிட் கெடுவை நீடிக்க: ஐரோ. ஒன்றியம் இணக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் நடவடிக்கைக்கான காலக்கெடுவை, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நீட்டிக்க இணங்கியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பிரசல்ஸில் நடத்திய சந்திப்பில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னதாக, பிரிட்டன் பிரதமர் தெரேசா மே வரும் ஜூன் மாத இறுதிவரை கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் சுமுகமாக வெளியேற, அதிகபட்சம் ஓராண்டு வரை கால அவகாசம் வழங்க விரும்புவதாகப் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூறினர்.

பிரிட்டனின் வெளியேற்றத்தால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க, குறைவான கால அவகாசம் தேவை என மற்ற சில ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூறுகின்றனர்.

எத்தகைய கால அவகாசம் வழங்கப்பட்டாலும், பாராளுமன்றம் ஒப்புதல் அளித்த உடனேயே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வழி இருக்கவேண்டும் என பிரிட்டன் பிரதமர் மே குறிப்பிட்டார்.

Fri, 04/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை