பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு பல்கலை பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் கலாநிதி சாஹித் அஹ்மத்தை உயர் ஸ்தானிகராலயத்தில் சந்தித்தனர்.

பாகிஸ்தானிய விமானப்படை அதிகாரி முஸ்தபா அன்வரின் வழிநடத்தலின் கீழ் இக்குழுவானது 06 நாட்கள் இலங்கையில் விஜயம் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானிய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் கற்கைகளை தொடரும் ஈரான், பங்களாதேஷ் மற்றும் நேபாள இராணுவ அதிகாரிகள் இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இக்குழுவானது இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் தளபதிகள் போன்ற முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை