வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டாலும் ஜனநாயக உரிமையை வழங்கியுள்ளோம்

கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற முடியாவிட்டாலும் மக்களுக்கான ஜனநாயக உரிமையை வழங்கியுள்ளோம் என மின்சக்தி சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிலர் பொய்யான கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்கள். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அச்சம் கொள்ளவில்லை.

நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் அரவணைத்துக் கொண்டு ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழும் சூழலை நாம் உருவாக்கியுள்ளோம்.

தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதும் எமது முக்கியமான பொறுப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை நாம் தமிழர்களது பிரச்சினையாக அன்றி தேசியப் பிரச்சினையாகத் தான் பார்க்கிறோம்.இன்று வெள்ளை வான் கலாசாரமோ கடத்தல் பயமோ இல்லை.

இந்த நிலையில் நாம் சில விடயங்களில் தாமதம் காட்டுவது நாட்டின் ஐக்கியத்துக்காகவே அன்றி தீர்வைப் பெற்றுக் கொடுக்கக் கூடாது என்றல்ல.

இந்தப் பிரச்சினைக்கான தீர்வை நாம் இலங்கைக்குள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் சர்வதேசத்தின் தலையீடு தேவையில்லை. இதனை நாம் சர்வதேசத்திடமே கூறிவிட்டோம் என்றார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை