நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக ஆரம்பம்

வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும். இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகி 3 நாள்கள் நடைபெறுகின்றது.

ஆரம்ப நிகழ்வு முற்பகல் 9.15 மணிக்கு வீரர்கள் அறிமுகம் இடம்பெற்று மு.ப.10 மணிக்கு போட்டி ஆரம்பமானது.

அதன் போது யாழ் . மத்திய கல்லூரி களதடுப்பை தெரிவு செய்து களதடுப்பை மேற்கொண்டு வருகின்றது.

பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடி வரும் நிலையில் , மத்திய கல்லூரியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது சீரான இடைவெளியில் தனது இலக்குகளை இழந்தன.

113ஆவது இன்னிங்ஸ் போட்டியான கிரிக்கெட் போட்டியானது, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் பாதுகாப்பு இரண்டு கல்லூரி சமூகத்தாலும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இரு கல்லூரி மாணவர்களும் சீருடையுடன் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர். பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் இருப்பிட வசதிகொண்ட பகுதிக்காக 100 ரூபா பணத்தை வழங்கி அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சுப்பிரமணியம் பூங்கா பக்கம் உள்ள நுழைவாயில் மூடப்படும்.சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பொதுநூலகப் பக்கமாக மைதானத்துக்கு மேற்குத் திசையிலிருக்கும் வாயில் ஊடாக அனுமதிக்கப்படுவர்.

ரிம்பர் மண்டப பக்கமாக உள்ள வாயில் ஊடாக மத்திய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

(யாழ்.விசேட நிருபர்) 

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை