அணிக்கு ஐந்து பேர்களை கொண்ட கால்பந்தாட்ட தொடர்

புத்தளம் நகர கால்ப்பந்தாட்ட வரலாற்றில் மூன்று தசாப்தங்களை கால்ப்பந்தாட்ட துறையில் தம்மை அர்ப்பணித்து சாதனைகளை நிலைநாட்டி அதனை பூர்த்தி விழாவாக கொண்டாடாடும் புத்தளம் நகரின் மூன்று சகோதரர்கள் இணைந்து நடாத்திய அணிக்கு ஐந்து பேர்களை கொண்ட கால்பந்தாட்ட தொடர் அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டித் தொடருக்கு புத்தளம் ட்ரீம் பில்டர்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்கி இருந்தது.

விலகல் முறையிலான இந்த போட்டி தொடர் அணிக்கு ஐந்து பேர்களை கொண்டதாகவும், மொத்தம் 20 நிமிட நேர காலத்தை கொண்டாதாவும் அமைந்திருந்தது. மொத்தமாக 16 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. த்ரீ ஸ்டார்ஸ் பீ அணிக்கும், மாதம்பை அணிக்குமிடையில் நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் மாதம்பை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும், த்ரீ ஸ்டார்ஸ் ஏ அணிக்கும், ஜுவனைல் அணிக்குமிடையில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் த்ரீ ஸ்டார்ஸ் ஏ அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றன.

மாதம்பை அணிக்கும், த்ரீ ஸ்டார்ஸ் ஏ அணிக்குமிடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இரு அணிகளும் கோல்களை போடாத நிலையில் நடைபெற்ற பெனால்டி உதையில் மாதம்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆகியதோடு இரண்டாம் இடத்தினை த்ரீ ஸ்டார்ஸ் ஏ அணி தக்க வைத்து கொண்டது.

சம்பியன் அணிக்கு 8000 ரூபாய் பணப்பரிசுடன் வெற்றிக்கிண்ணமும், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு 4000 ரூபாய் பணப்பரிசுடன் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன. இது தவிர சிறந்த ஆட்டக்காரர்கள் இருவருக்கும், சிறந்த பின்வரிசை வீரர் ஒருவருக்கும் இதன்போது விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் கால்ப்பந்தாட்ட கழகத்தினை நீண்ட காலம் வழிநடாத்தி வந்த என்.எல்.எம். அலி மரைக்காரின் புதல்வர்களான ஏ.எம். சபீக், ஏ.எம். முஸ்தாக், ஏ,எம். பாக்கிர் ஆகியோர் இணைந்தே இந்த ஒரு நாள் போட்டி தொடரினை நடாத்தினர்.

புத்தளம் தினகரன் நிருபர்

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை