நீர்கொழும்பு அல் ஹிலால் அணி இறுதிச் சுற்றுக்குத் தகுதி

நீர்கொழும்பு அல் -- ஹிலால் மத்திய கல்லூரியின் 12 வயதுக்கு கீழ்ப்பட்ட உதைபந்தாட்ட அணி 'மைலோ கிண்ணத்துக்கான' இறுதிச் சுற்றில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றுக் கொண்டுள்ளது. கம்பஹா மாவட்டத்திலுள்ள 63 அரச பாடசாலைகளின் 12 வயதுக்கு கீழ்ப்பட்ட உதைபந்தாட்ட அணிகளை எதிர்த்தாடி நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரி அணி குறித்த இறுதிச் சுற்றில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தென் மாகாண மாத்தறை மாநகர சபையின் மைதானத்தில் மேற்படி கிண்ணத்திற்கான இறுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 2ம் 3ம் மற்றும் 4ம் ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளன.

நீர்கொழும்பு அல் -- ஹிலால் மத்திய கல்லூரியின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளராக நீர்கொழும்பு லீக் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பீ.விஜயகுமார் கடைமையாற்றுகிறார்.

அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறையின் ஆலோசகர்களாக ஏ.ஏ.ஜே. சுவர்ணாலோகோ மற்றும் எம்.ராபிக் ஆகியோர் கடமையாற்றி வருகின்றனர்.

நீர்கொழும்பு அல் -- ஹிலால் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக எம்.கலீல் கடமையாற்றி வருகின்றார்.

(படம்: நீர்கொழும்பு தினகரன் நிருபர்)

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை