பாடும்மீன் அணியை வீழ்த்தி வதிரி டயமன்ஸ் அணி இறுதிக்குள்

கோல் மழைக்கு நடுவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் இறுதியில் வதிரி டயமன்ஸ் அணி, 07:05 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

யாழ்ப்பாணம் லீக்கின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, யாழ்.மாவட்டத்திலுள்ள லீக்குகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் கால் பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்று துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்தச் சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதியாட்டம் கடந்த 25 ஆம் திகதி இரவு நடைபெற்றது. இதில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் அணி மோதியது.

இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கலல்ல என்ற ரீதியில் மாறி மாறி கோல் மழைபொலிந்து ரசிகர்களுக்கு விருந்தளித்திருந்த நிலையில் வதிரி டயமன்ஸ் அணி சற்றே உத்வேகத்துடன் ஆடி பாடும்மீன் அணியை வென்று இறுதி போட்டிக்கு தெரிவாகியது.

கொக்குவில் குறுப் நிருபர்

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை