நெஸ்லே அனுசரணையில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் மெய்வல்லுனர் போட்டி

215 அணிகள் பங்கேற்பு

நெஸ்லே அனுசரணையில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் மெய்வல்லுனர் போட்டி அண்மையில் கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்டிகளில் தரம் 3 மாணவர்கள் பங்கேற்றனர்.2544 மாணவர்களில் 215 அணிகள் பங்கேற்றன.இப் போட்டிக்கு பிரதம அதிதியாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க கலந்து கொண்டார்.

ஆண்களுக்கான போட்டியில் முதலிடத்தை கினிகத்தேன்ன ஆரம்ப பாடசாலையும் இரண்டாம் இடத்தை ஜயவர்தனபுர குணசேர வித்தியாலயமும் மூன்றாமிடத்தை மாத்தறை ராகுல வித்தியாலயமும் தெரிவானது.

பெண்களுக்கான போட்டியில் முதலிடத்தை ஹோமாகம மஹகாக்க ஆரம்ப பாடசாலையும் இரண்டாமிடத்தை கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையும் மூன்றாமிடத்தை கேகாலை கலிகமுவ ஆரம்ப பாடசாலையும் தெரிவானது.

கலப்பு முறையில் இடம்பெற்ற போட்டிகளில் முதலிடத்தை ஹற்றன் அல்பியன் தமிழ் வித்தியாலயமும் இரண்டாமிடத்தை கொத்மலை ஆனந்த திஸாநாயக்க வித்தியாலயமும் மூன்றாமிடத்தை ஹற்றன் செலிவேட்டோ தமிழ் வித்தியாலயமும் தெரிவானது.

ஏ.ஆர். பரீத்

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை