கல்முனை உவெஸ்லி- காரைதீவு விபுலாநந்தா அணிகள் இன்று மோதல்

'கிழக்கு கரையோரச்சமர்' என வர்ணிக்கப்படும் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரிக்கும் கல்முனை உவெஸ்லி உயர்தர கல்லூரிக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வரலாற்றில் டெலிகொம் நிறுவன அனுசரணையுடன் நடைபெறும் முதலாவது கன்னிப்போட்டியாக இது அமைகிறது.

காலை 9 மணிக்கு காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் இடம்பெறும் போட்டியை பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் அங்குரார்ப்பணம் செய்துவைக்கவிருக்கிறார்.

இருபாடசாலைகளின் அதிபர்களான தி.வித்யாராஜன், வ.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் அங்குரார்ப் பண வைபவம் நடைபெறவிருக்கிறது.

காரைதீவு விபுலாநந்தா அணியில் எம்.சஞ்சீவ்(தலைவர்) எ.தேவசாகர்(உபதலைவர்) எஸ்.அஜித்குமார் எஸ்.ஜனோஜ் கே.திலக்ஷன் ஜி.விதுசன்ன் எஸ்.சோபிதாஸ் எஸ்.புவேந்திரா ஜெ.ஜதுஷாகர் ஆர்.பிரபாதாசன் ஆர்.டிசாந் யு.சனுஷாந் ரி.சிருஸ்காந் எஸ்.கஜானந் எஸ்.கோசிகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கல்முனை உவெஸ்லி அணியில் ஜி.வினோஜித்(தலைவர்) என்.நிரோஸ்காந்(உப -தலைவர்) எஸ்.நிப்ராஸ் யு.எல்.எம்.பர்சாத் எம்.சதுஸன் எம்.நப்றிஸ் ரி.சுகேஸ் ரி.பிரவீன் கே.எம்.ஆசாத் எ.ஹரிசன் ஐ.டிசார்கன் ஜி.சன்ஜித் ரி.ஹரிஸ் எஸ்.மேஷாக் பி.தஷாஞ்ஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த மற்றும் கல்விபயின்ற இடங்கள் என்ற அடிப்படையில் காரைதீவு, கல்முனை அணிகள் தெரிவுசெய்யப்பட்டன என்று அனுசரணையாளர்களான டெலிகொம் நிறுவன பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் பிரான்சிஸ் நியூட்டன் நிசாந்த் தெரிவித்தார்.

கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீல், பிரதேச செயலாளர்களான ஜே.அதிசயராஜ், வி.ஜெகதீசன், காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில், ரெலிகொம் நிறுவனத்தின் வட-கிழக்குப்பிராந்திய பொதுமுகாமையாளர் பொறியியலாளர் எ.கிருபாகரன், பிரதிப்பொது முகாமையாளர் பொறியியலாளர் வை.கோபிநாத், சந்தைப்படுத்தல் பிரதிப்பொதுமுகாமையாளர் பொறியியலாளர் அனுருத்தசூரியாராய்ச்சி, பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் நியுட்டன் நிசாந்த் , சந்தைப்படுத்தல் பொறியிலாளர் டி.எஸ்.பி.மாபா ஆகியோர் கலந்துசிறப்பிக்கவிருக்கின்றனர்.

சிறப்பு அதிதிகளாக கல்முனை பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.கே.ஜெயநித்தி, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னுஅசார், கல்முனை வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், உதவிக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.மொகமட் சாஜித், ஆசிரிய ஆலோசகர் ஜ.எல்.எம்.இப்றாகிம், பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர்களான ஜே.பத்தலோமியஸ், எம்.சிதம்பரநாதன் பழைய மாணவர் சங்கச் செயலாளர்களான டாக்டர்.என்.ரமேஸ், வி.விஜயசாந்தன், கிழக்கு மாகாண கிரிக்கெட் ஒன்றிய செயலாளர் சிதத்லியனாராய்ச்சி ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

வரலாற்றில் முதற்றடவையாக நடைபெறவிருக்கும் இப்பெருஞ்சமர் பார்வையாளர்களுக்கு விருந்துபடைக்குமென எதிர்பார்க்கலாம்.

காரைதீவு குறூப் நிருபர்

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை