காசா மீது 4ஆவது முறை இஸ்ரேல் வான் தாக்குதல்

இஸ்ரேலை நோக்கி வெடிக்கும் பலூன்களை விட்டதற்காக நான்காவது முறையாக காசா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

கடந்த செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற இந்த தாக்குதல்களை பலஸ்தீன பாதுகாப்பு தரப்பு உறுதி செய்துள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “வடக்கு காசா பகுதியின் ஹமாஸ் வளாகம் ஒன்றின் தீவிரவாத இலக்குகள் மீது போர் விமானங்கள் பல தடவை தாக்குதல் நடத்தியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி வெடிக்கும் பலுௗன்கள் பறக்கவிடப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் இவ்வாறு பலுௗன்கள் பறக்கவிடப்பட்டதற்காக காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்துவது இது நான்காவது முறையாகும்.

காசா எல்லைக்கு அருகில் இருக்கும் இஸ்ரேலிய சமூகங்கள் மற்றும் விவசாய நிலங்களை இலக்கு வைத்தே பலஸ்தீனர்கள் வெடிக்கும் பலுௗன்களை பறக்கவிடுகின்றனர்.

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை