உலகில் இளம் வயதில் செல்வந்தரான அழகி

அமெரிக்காவின் மொடல் அழகியும் தொலைக்காட்சி நட்சத்திரமுமான 21 வயது கைலி ஜென்னர் உலகில் இளம் வயதில் சுய சம்பாத்தியத்தில் செல்வந்தரானவர் என போர்பஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. தமது பெயரில் ஒப்பனை அலங்காரப் பொருட்களை அவர் கடந்த 2016ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். தற்போது அவரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்படி பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பேர்க் 23 வயதில் உலக செல்வந்தரானதை விடவும் அவர் முன்கூட்டியே பெரும் செல்வந்தராகியுள்ளார். இந்தப் பட்டியலில் உலகின் பெரும் செல்வந்தராக அமேசன் நிறுவனர் ஜெப் பெசோன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை