எயிட்ஸ் வைரஸில் இருந்து 2ஆவது நோயாளி விடுதலை

ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை மேற்கொண்ட பிரிட்டன் நாட்டு நோயாளி ஒருவர் எச்.ஐ.வி வைரஸில் இருந்து முழுமையாக சுகம் பெற்றுள்ளார். இந்த நோயில் இருந்து முழுமையாக சுகம் பெற்ற இரண்டாமவராக அவர் இருப்பதாக ‘நேச்சர்’ சஞ்சிகைக்கு மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த லண்டனைச் சேர்ந்த இந்த நோயாளி, 18 மாதங்களாக எச்.ஐ.வியில் இருந்து சுகம் பெற்றிருப்பதோடு அதற்கான மருந்துகளை பெறுவதையும் நிறுத்திக் கொண்டுள்ளார்.

எனினும் அந்த நோயாளி எச்.ஐ.வியில் இருந்து முழுமையாக சுகம் பெற்றதாக தற்போது கூற முடியது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எச்.ஐ.வி. நோய் தொற்றை எதிர்க்கும் அரிதான மரபணு பிறழ்வு கொண்ட நன்கொடையாளரிடம் இருந்து ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சையை ஒன்றை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நோயாளி மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி இரண்டில் இருந்தும் குணமடைந்துள்ளார்.

லண்டன் பல்கலைக்கழகம், இம்பீரியல் பல்கலைக்கழம், கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறான சிகிச்சை ஒன்றின் மூலம் எச்.ஐ.வியில் இருந்து முழுமையாக குணமடைந்தது தொடர்பான சம்பவம் பதிவாவது இது இரண்டாவது முறையாகும்.

பத்து ஆண்டுகளுக்கு முன் பெர்லினில் இந்த தொற்றில் இருந்து இயற்கையாக எதிர்ப்புச் சக்தி கொண்ட நன்கொடையாளர் இடம் இருந்து எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை செய்து கொண்ட ஒருவர் முழுமையாக குணமடைந்தார்.

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை