வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவர் நாடு திரும்பினார்

தன்னைத் தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட வெனிசுவேல எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் வரவேற்புடன் தலைநகர் கரகாஸ் திரும்பியுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் விதித்த தடையை மீது சர்வதேச உதவியைக் கோரி வெளிநாடு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு இருந்தது.

எனினும் சிமோன் பொலிவர் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த திங்கட்கிழமை வந்திறங்கிய குவைடோவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இராஜதந்திரிகள் வரவேற்றனர். அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் ‘எம்மால் முடியும்’ என்று கோசமெழுப்பினர்.

“அவர்கள் எம்மை அச்சுறுத்துகின்றனர். நாம் இங்கே இருக்குறோம், வெனிசுவேலாவுக்காக அதற்கு முகம்கொடுக்க தயாராக உள்ளோம்” என்று ஆதரவாளர்கள் முன் குவைடோ குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவை பதவி விலகும்படி குவைடோ அழைப்பு விடுத்துள்ளார். இந்த இருவரும் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அதிகார போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2018ஆம் ஆண்டு மே மாதம் மடுரோ வெற்றி பெற்ற ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதம் எனக் கூறும் குவைடோ தம்மை இடைக்கால ஜனாதிபதியாக அறித்துக் கொண்டார். அவரை அமெரிக்கா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன.

எனினும் மடுரோவுக்கு சீனா, ரஷ்யா மற்றும் கியூபா ஆதரவை வெளியிட்டுள்ளன.

பணவீக்கம், அடிப்படைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உட்பட கடும் பொருளாதார நெருக்கடியை எதிகொண்டிருக்கும் வெனிசுவேலாவில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை