மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரி உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல்

சப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு, மத்திய, வடமேல், மற்றும் வட மாகாணங்களுக்கான மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலமான நீதி ஆணையொன்றை பிறப்பிக்குமாறு கோரி 'உண்மையை தேடுவோர் அமைப்பு' நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.  

மேற்படி அமைப்பின் ஆறு அங்கத்தவர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான நளின் அபேசேகர, ரட்னஜீவன் ஹுல் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.  

அரசியலமைப்பின் 104 B என்ற விதப்புரை, 1988 இன் மாகாண சபைகள் சட்டத்தின் 2 ஆம் இலக்க விதப்புரை மற்றும் 2017 இன் 17 ஆம் இலக்க சட்டம் சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாண சபைகளுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் இருந்தவாறு மாகாண சபைகளை உருவாக்குமாறு மேற்படி பிரதிவாதிகளுக்கு செயலுறுத்தும் நீதிமன்ற ஆணையொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கேட்டுள்ளனர்.  

Tue, 02/19/2019 - 08:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை