நாடு முழுவதும் தேங்காய் எண்ணெய் பரிசோதனை

நாட்டிலுள்ள அனைத்து தேங்காய் எண்ணெய் விற்பனை மற்றும் உற்பத்தி நிலையங்களை பரிசோதனை செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் நேற்று முதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.  

தரமற்ற தேங்காய் எண்ணெய் தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தமது சங்கத்திற்கு கிடைத்துள்ள பெருமளவு முறைப்பாடுகளுக்கு அமையவே மேற்படி பரிசோதனையை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.  

இதற்கிணங்க தேங்காய் எண்ணெய் விற்கப்படும் இடங்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் திடீர் பரிசோதனைகளை நடத்தி அதன் மாதிரியை இரசாயன பரிசோதனை பிரிவுக்கு அனுப்பி அதன் அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

இரசாயன பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதனை ஆராய்ந்து அதற்கிணங்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  

இவ்வாறான தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் பொது மக்கள் தமக்கு அறியத் தரவேண்டும் என அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தரமற்ற தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)  

Wed, 02/20/2019 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை