அரசு உறுதியாக இருக்கும் போதுதான் வௌிநாட்டு உதவிகள் கிடைக்கும்

2015ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்ட அரசினால் சுயமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. அனைத்தையும் பங்குபோடவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் சட்ட விரோதமாக ஓர் அரசு நிறுவப் பட்டு நாட்டுக்குப் பாரிய நட்டம் ஏற்பட்டது . அரசு உறுதியாக இருக்கும் போதுதான் வெளிநாட்டு உதவிகள் கிடைக்கின்றன என்று தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.  

அக்குறணை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட விலானகம பிரதேசத்தில் சனிக்கிழமை (16) ரூ. 20இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாதை ஒன்றை புனரமைத்து திறந்துவைத்த பின் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

அமைச்சர் ஹலீம் இங்கு மேலும் தெரிவித்ததாவது, -  

கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாங்கள் அரசாங்கம் ஒன்றை உருவாக்கிய போதும் அவ் அரசாங்கம் மூலம் எங்களுக்கு சுயமாக சேவைகளைச் செய்ய இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. அன்று நாங்கள் கூட்டு அரசாங்கம் ஒன்றையமைத்தோம். இதனால் அனைத்தையும் பங்கு போடவேண்டிய நிலை ஏற்பட்டது.  

சில மாதங்களுக்கு முன் சட்ட விரோதமான முறையில் உருவாக்கப்பட்ட அரசு காரணமாக நாட்டுக்குப் பாரிய நட்டம் ஏற்பட்டது. நாட்டின் அரசு உறுதியற்றதாக இருக்கும் போது வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதில்லை.  

இன்று சிலர் விரைவில் தேர்தலை நடாத்துமாறு கேட்கின்றனர். நாங்கள் தேர்தல்களை நடத்துவோம். முதலில் ஜனாதிபதித்தேர்தலை நடாத்திய பின்னரே ஏனைய தேர்தல்களை நடாத்த உள்ளதாகவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.  

அக்குறணை குறூப் நிருபர்

Tue, 02/19/2019 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை