அமெரிக்கா ஆர்டிக் பிரதேசத்தை விடவும் கடும் குளிரால் பாதிப்பு

துருவ சுழல் என்று அறியப்படும் கடும் குளிரால் மத்திய மேற்கு அமெரிக்க பிராந்தியம் எங்கும் நகரங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன.

ஆர்டிக் காலநிலை காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். சிகாகோவில் வெப்பநிலை மைனஸ் 30 செல்சியஸாக பதிவாகி இருப்பதோடு, வடக்கு டகோடாவில் மைனஸ் 37 செல்சியஸ் வெப்பநிலை காணப்படுகிறது. அது ஆர்டிக் பிரதேசத்தை விடவும் குளிரான காலநிலையாகும்.

இந்த உறையும் காலநிலையால் அமெரிக்காவில் 250 மில்லியன் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 90 மில்லியன் மக்கள் மைனஸ் 17 செல்சியஸுக்கு கீழான வெப்பநிலையை அனுபவித்து வருகின்றனர். இதனால் ஆறுகளும் நீர்நிலைகளும் உறைந்த நிலையில் காணப்படுகின்றன.

அதிகக் குளிர் காரணமாக பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு, விமான நிலையங்களில் 2000க்கும் மேற்பட்ட சேவைகள் நிறுத்தப்பட்டன.

கிரேட் லேக் பிராந்தியத்தில் இருந்து நியூ இங்கிலாந்து வரை கடந்த புதன்கிழமை பனிப்பொழிவு இடம்பெற்றது. விஸ்கோசிஸ் தெற்கில் 24 அங்குலம் அளவுக்கும், இல்லினொய்ஸில் 6 அங்குலம் அளவுக்கும் பனிப்பொழிவு பதிவானது.

விஸ்கோசிஸ், மிச்சிகன் மற்றும் இல்லியானோ ஆகிய மத்திய மேற்கு அமெரிக்கா அதேபோன்று சாதாண சூடான காலநிலை கொண்ட தொலைதூர தொற்கு மாநிலங்களான அலபாமா மற்றும் மிசிசிப்பியிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

“இது வரலாற்றில் இடம்பெற சாத்தியம் உள்ளது” என்று இல்லினோய்ஸில் உள்ள தேசிய வாநிலை சேவையின் ரிக்கி காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மேற்கு திசையில் தட்பவெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என்று அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

அடிக்கும் குளிர் காற்று மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால், சில நிமிடங்களில் குளிர்நடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தட்பவெப்பநிலை அளவு உறைநிலைக்கும் கீழ் செல்வதால் மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

வெளியில் செல்லும்போது ஆழ்ந்து மூச்சுவிட வேண்டாமென்றும், பேச்சைக் குறைத்துக்கொள்ளுமாறும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை