இஸ்ரேல் அமைச்சருக்கு பதினொரு ஆண்டு சிறை

ஈரானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இஸ்ரேல் முன்னாள் அமைச்சர் கொனென் சாகேவுக்கு 11 ஆண்டுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ஆற்றல் மற்றும் உட்பட்டமைப்பு அமைச்சராக 1995 தொடக்கம் 1996 வரை இருந்த சேகேவ், எதிரிக்கு தகவல்களை வழங்கியது மற்றும் உளவு வேலையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இரகசியமாகவே விசாரிக்கப்பட்டது.

சேகேவின் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிபதி ஏற்று அவர் மீதான தண்டனையை விதித்ததாக அரசதுறை வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் அவர் குற்றவியல் குற்றச்சாட்டுகளில் சிறை அனுபவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை