ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் சாரிப் இராஜினாமா

ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் சாரிப் திடீர் இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற குறைபாடுகளுக்காக அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

பிரதான வல்லரசு நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு ஈரான் செய்துகொண்ட அணுசக்தி உடன்படிக்கையின் முக்கிய பாத்திரம் வகித்தவராக சாரிப் உள்ளார். எனினும் இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை அடுத்து அது கேள்விக்குறியாகியுள்ளது.

59 வயதான சாரிப் அமெரிக்காவில் கல்வி கற்றவராவார். சர்வதேச சட்டம் தொடர்பில் டென்வேர் பல்கலைக்கழகத்தில் கலநிதிப் பட்டம் பெற்றுள்ளார்.

ஐ.நாவுக்கான ஈரான் தூதுவராக இருந்த சாரிப் 2013 ஆம் ஆண்டு ஈரான் வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்றார்.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை