யெமனுக்கு ஐ.நா சாதனை அளவு உதவிக் கோரிக்கை

யெமனில் பல ஆண்டு யுத்தம் காரணமாக மக்கள் பஞ்சத்தால் வாடும் நிலையில் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு 4.2 பில்லியன் டொலர் சர்வதேச உதவியை ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.

19 மில்லியன் மக்களுக்கு உதவும் திட்டத்துடனான இந்த உதவிக் கோரிக்கை ஒரு நாட்டுக்காக ஐ.நாவால் கோரப்பட்ட அதிக தொகையாகும். யெமனில் சுமார் 240,000 பேர் பேரழிவை ஏற்படுத்தும் அளவு பட்டினியில் வாடுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

“பத்து மில்லியன் மக்கள் பஞ்சத்தை நெருங்கி இருப்பது உட்பட சுமார் 20 மில்லியன் மக்களின் உணவு பாதுகாப்புக்கு உதவ வேண்டி இருப்பதாக” ஐ.நா அவசர நிவாரண உதவிகளுக்கான தலைவர் மார்க் லோகொக் குறிப்பிட்டார். ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதி அரசுக்கு இடையில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் நீடித்து வரும் போரால் உலகில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை யெமன் எதிர்கொண்டுள்ளது. இந்த போரில் சவூதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் தலையீடு நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை