கிளிவெட்டி ஆஸாத் நகர் அல்-பலாஹ் வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி

மூதூர் கல்வி வலயத்தின் கிளிவெட்டி ஆஸாத் நகர் அல்-பலாஹ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கடந்த வியாழக்கிழமை வித்தியாலய மைதானத்தில் அதிபர் ஏ. மஹ்சப் தலைமையிலும்,உடற்கல்வி ஆசிரியர் ஜே. எம். டில்சாத் வழிகாட்டலிலும் நடைபெற்றன.  

இந்நிகழ்வின் பிரதமஅதிதியாக மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ. எல். எம். ஹாசிம் , விஷேட அதிதிகளாக மூதூர் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி, ஹாஜா முகைதீன்,வலயத்தின் ஆசிரிய ஆலோசகரும்,ஈ..பி.எஸ்.ஐ. இணைப்பாளருமான ஏ. எச். மௌஜீத் , முதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜனாபா ஜெசீலா ஹுஸைனுத்தீன்,பீ. ரி. ஆப்தீன்,எம். ஐ. மஹ்றூப் ஆகியோரும் கலந்துகொண்டு கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர்.  

பெரு விளையாட்டுக்களாக நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனாக சபயர் இல்லமும், இரண்டாம் இடத்தை எமரோல்ட் இல்லமும் மூன்றாம் இடத்தை றூபி இல்லமும் பெற்றுக்கொண்டது.

கரப்பந்தாட்டப் போட்டியில் சம்பியனாக சபையர் இல்லமும் இரண்டாம் இடத்தை றூபி இல்லமும், மூன்றாம் இடத்தை எமரோல்ட் இல்லமும் பெற்றுக்கொண்டது. கிரிக்கெட் போட்டியில் சம்பியனாக சபையர் இல்லமும் இரண்டாம் இடத்தை எமரோல்ட் இல்லமும், மூன்றாம் இடத்தை றூபி இல்லமும் பெற்றுக்கொண்டது.  

இறுதிநாள் நிகழ்வின்போதுசபையர் இல்லம் (நீலம்) 352 புள்ளிகளைப்பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் 275 புள்ளிகளைப் பெற்று எமரோல்ட் இல்லம் (பச்சை), இரண்டாம் இடத்தினையும், 242 புள்ளிகளைப் பெற்று றூபி இல்லம் (சிவப்பு) மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.   

(கல்முனை சுழற்சி நிருபர்)

Thu, 02/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை