டிரம்ப்–கிம் இம்மாத இறுதியில் வியட்நாமில் மீண்டும் சந்திப்பு

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை இம்மாத இறுதியில் மீண்டும் சந்திப்பது குறித்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.  

நாட்டு மக்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை உரையாற்றிய டிரம்ப், வரும் பெப்ரவரி 27–28வியட்நாமில் கிம்மை சந்திக்கவிருப்பதாக குறிப்பிட்டார்.  

“நான் மட்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டிருக்காவிட்டால் இந்நேரம் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் மிகப் பெரிய போர் உருவாகியிருக்கும்” என்று டிரம்ப் குறிப்பிட்டார். 

“அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் உறவுகள் மேம்பாடில் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டும். ஆனால், கிம் ஜொங் உன்னுடன் எனது உறவு நன்றாகவே உள்ளது” என்று அவர் மேலும் கூறினார். 

கடந்த ஆண்டு இந்த இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த வரலாற்று புகழ்மிக்க சந்திப்புக்கு பின்னர் இவர்களுக்கு இடையே இரண்டாவது உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் மாதத்தில் முதல்முறையாக பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியும், வட கொரிய தலைவரும் சிங்கப்பூரில் சந்தித்தனர். 

எனினும் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டுக்குப் பின்னர் வட கொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பில் முன்னெற்றம் எதுவும் ஏற்படவில்லை.  

கிம்முடன் தமக்கு நல்ல உறவு இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். கடந்த 15 மாதங்களில் வட கொரியா எவ்வித அணுவாயுதச் சோதனையையும் நடத்தவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.   

Thu, 02/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை