பனிப்போர் ஒப்பந்தம்: ரஷ்யா விலக முடிவு

அமெரிக்காவுடன் செய்து கொண்ட பனிப்போர் காலத்து ஏவுகணை உடன்படிக்கையினை முறித்துக் கொண்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். 

ரஷ்ய மற்றும் அமெரிக்கா இடையிலான பனிப்போர் முடிவுற 4 ஆண்டுகளுக்கு முன்னர் 1987 ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளும் தாம் தயாரிக்கும் ஏவுகணைகளின் ஆற்றல் மற்றும் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் முகமாக இந்த உடன்படிக்கையை செய்து கொண்டன. 

அண்மைக் காலமாக இந்த ஒப்பந்தத்தை மதிக்காது ரஷ்யா ஏவுகணைகளைத் தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. இதனால் ஏற்கனவே தம்முடைய அத்துமீறலான ஏவுகணைகள் அனைத்தையும் அழிக்காவிட்டால் ரஷ்யாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் இருந்து விலகப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.  

இவ்வாறு செய்யத் தவறினால் இன்னும் 6 மாதங்களுக்குள் ரஷ்யாவுடனான உடன்படிக்கையில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்திருந்தார். 

ஆனால் அதற்குள் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     

Mon, 02/04/2019 - 12:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை