பாப்பரசர் முதல் முறையாக அரபு தீபகற்பத்திற்கு விஜயம்

அரபு தீபகற்பத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் பாப்பரசராக பாப்பரசர் பிரான்ஸிஸ் நேற்று(03)ஐக்கிய அரபு இராச்சியத்தை வந்தடைந்துள்ளார்.  

மதங்களுக்கு இடையிலான மாநாட்டில் பங்கேற்கும்படி பாப்பரசருக்கு அபூதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷெய்க் முஹமது பின் சயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தில் சுமார் 120,000 பேர் பங்கேற்கும் ஆராதனை ஒன்றிலும் பாப்பரசர் பங்கேற்கவுள்ளார்.  

இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நட்டவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் ஒரு மில்லியன் ரோமன் கத்தோலிக்கர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கின்றனர்.  பாப்பரசர் அபூதாபியில் வைத்து சுன்னி முஸ்லிம்களின் உயர் நிலையாக கருதப்படும் கெய்ரோவின் அல் அஸ்ஹர் பள்ளிவாசலின் தலைமை இமாம் ஷெய்க் அஹமத் அல் தயிப்பையும் சந்திக்கவுள்ளார்.  

இந்த விஜயம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் திருச்சபையின் இருப்பை வலுப்பெறச் செய்யும் என்று வத்திக்கான் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

“உண்மையில் நாம் நிலைபெற்றுள்ளோம். எமக்கு அதிக தேவாலயங்கள் தேவையாக உள்ளன. எமக்கு அதிக மதகுருக்கள் தேவையாக உள்ளனர்” என்று அதிகாரி ஒரு ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார்.      

Mon, 02/04/2019 - 12:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை