அரச வழக்கறிஞர் கொலை: எகிப்தில் 9 பேருக்கு தூக்கு

எகிப்து தலைமை அரச வழக்கறிஞர் ஹிஷாம் பரகத் 2015 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் ஒன்பது பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைநகர் கெய்ரோவில் பரகத் சென்ற வாகன தொடரணி மீது கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 28 பேரில் உள்ளவர்களுக்கே இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

துன்புறுத்தப்பட்டு நியாயமற்ற முறையில் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் அஹமதி நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் வீடியோ பதிவு வெளியாகி இருந்தது. அதில் அவர், “மின்சாரத்தை ஏற்றும்போது (முன்னாள் ஜனாதிபதி அன்வர்) சதாத்தைக் கொன்றதாகக் கூட யாரும் ஒப்புக்கொள்வார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். எகிப்தில் முதல்முறையாக ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி மொஹமட் முர்சியை இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்த்த 2013 ஜூலை தொடக்கம் அரசியல் வன்முறைகள் தொடரபில் எகிப்து குற்றவியல் நீதிமன்றம் நூற்றுக்கணக்கானோருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை