ஐ.எஸ் பெண் அமெரிக்கா வருவதை தடுக்க உத்தரவு

அமெரிக்காவில் இருந்து வெளியேறி இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் பிரசாரகராக மாறிய ஹொதா முதானா என்ற பெண்ணுக்கு மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.

“ஹொதா முதானாவை மீண்டும் நாட்டுக்கு வர அனுமதிக்க வேண்டாம்” என்று இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவை அறிவுறுத்தியதாக டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

24 வயதான அந்தப் பெண் அமெரிக்க பிரஜை இல்லை என்றும் அவர் ஏற்கப்பட மாட்டார் என்றும் பொம்பியோ முன்னதாக குறிப்பிட்டார். எனினும் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் அவர் அமெரிக்க பிரஜை என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அலபாடாவில் வளர்ந்த முதானா 20 வயதில் சிரியாவுக்கு பயணித்து ஐ.எஸ் உடன் இணைந்தார். துருக்கியில் பல்கலைக்கழக நிகழ்வொன்றில் பங்கேற்கப்போவதாக குடும்பத்தினரிடம் கூறியே அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.

இதேபோன்ற நிலை பிரிட்டனில் பிறந்த ஷமீமா பேகம் என்ற பெண்ணுக்கும் ஏற்பட்டுள்ளது. அவரது பிரிட்டன் குடியுரிமை தற்போது அகற்றப்பட்டுள்ளது.

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை