தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஓரிரு தினங்களில் நியாயமான தீர்வு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஓரிரு வாரங்களில் நியாயமான சம்பளத்துடன் தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கைச்சாத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் முன்னுக்கு பின் முரணான பல்வேறு கருத்துக்களும் செய்திகளும் வெளியாகி வருகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம். சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அறிவிக்கும் அறிவிப்பே உத்தியோக பூர்வமானது.

தற்போது பெருந்தோட்ட கைதொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க வெயிநாடு சென்றுள்ளார். ஓரிரு நாட்களில் நாடு திரும்பவுள்ளார். அவர் வந்ததும் தொழில் அமைச்சு ஊடாக பெருந்தோட்டக் கம்பனிகளுடன் உடனே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு வெகு விரைவில் தீர்வு காணப்படும்.  இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்கமையவே இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த விடயம் தொடர்பில் தொழில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேவுடன் நாளாந்தம் பேசி அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றேன்.

இம்முறை நியாயமான சம்பளத்துடன் நிலுவைப் பணத்தையும் பெற்றுக் கொடுப்பதில் ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்கள் உறுதியாக உள்ளன. தோட்ட தொழிலாளர்களின் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர நாங்களும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றோம். இந்தப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் முடிவு எடுப்போம் என்று கூறினார்.

 

Sat, 01/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை