சீனாவுக்கான கனடா தூதுவர் பணி நீக்கம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீனாவுக்கான அந்நாட்டு தூதர் ஜோன் மெக்கலனை பணி நீக்கம் செய்துள்ளார். 

கைதுசெய்யப்பட்ட ஹுவாயி நிறுவனத்தின் உயர் அதிகாரி மெங் வான்ஸோவை கனடா அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பில் மெக்கலன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பிலேயே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க மெங்கை கனடா தடுத்து வைத்துள்ளது. அது சீனாவுக்குச் சினமூட்டியுள்ளது.  

அந்தச் சம்பவத்தால் கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் கசப்படைந்துள்ளன. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் மெங் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

ஹுவாயி அதிகாரி மெங் கைது விவகாரம் தவறான செயல் என்ற தொனியில் மெக்கலன் கடந்த செவ்வாய்க்கிழமை விமர்சித்து இருந்தார். 

ஆனால், அடுத்த நாளே தான் தவறாக பேசிவிட்டதாகவும், தனது பேச்சு குழப்பத்தை விளைவித்ததற்காக மன்னிப்பும் கோரி இருந்தார். 

இந்த விவகாரமானது சீனா மற்றும் கனடா உறவில் மேலும் விரிசலை உண்டாக்குமென கருதப்படுகிறது.     

Mon, 01/28/2019 - 12:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை