தலிபான் மற்றும் அமெரிக்கா பேச்சில் முக்கிய முன்னேற்றம்

ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டு மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  

கட்டாரில் நடைபெற்ற முன்னெப்போதும் இல்லாத ஆறு நாள் பேச்சுவார்த்தையில் கடந்த காலங்களை விடவும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டது என்று அமெரிக்க பிரதிநிதி சல்மே கலில்சாத் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். எனினும் அது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.  

இது பற்றி ஆப்கான் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காபுல் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கான் அரசை ஒரு கைப்பாவை என்று குறிப்பிடும் தலிபான்கள் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்து வருகின்றனர். 

இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தலிபான்களும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் தீர்க்கப்படாத விடயங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும் தலிபான் பேச்சாளர்கள் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  

இந்நிலையில் வரைவு உடன்படிக்கை ஒன்றில் உள்ளடக்கப்படும் உட்கூறுகள் பற்றி இரு தரப்பும் இறுதி முடிவு ஒன்றுக் வந்ததாக தலிபான் தரப்பை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  

இதில் அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்புகள் அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானில் தளம் அமைப்பதற்கு அனுமதிப்பதில்லை என்ற உறுதிப்பாட்டுக்கு பகரமாக 18 மாதங்களுக்குள் வெளிநாட்டு துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேறுவதற்கு உடன்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.  

கைதிகள் பரிமாற்றம் மற்றும் சில தலிபான் தலைவர்கள் மீது உள்ள பயணத்தடையை தளர்த்துவது போன்ற முக்கிய விடயங்களிலும் இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு வந்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

2014 ஆம் ஆண்டு ஆப்கானி்ல் இருந்து வெளிநாட்டு போர் துருப்புகள் வெளியேறியதைத் தொடர்ந்து அங்கு தலிபான்கள் வலுப்பெற்றுள்ளனர்.      

Mon, 01/28/2019 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை