மேலும் கடவுள் துகள்களை கண்டுபிடிக்க பாரிய திட்டம்

ஐரோப்பிய அணு ஆயுத நிறுவனம் (சேர்ன்) தற்போதுள்ளதை விடவும் மிகப் பெரிய 100 கிலோமீற்றர் சுற்றளவு கொண்ட ஆட்ரோன் மோதுவி ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைக்கப்படவுள்ள மோதுவி தற்போதுள்ள ஆய்வு இயந்திரத்தை விடவும் கிட்டத்தை 10 மடங்கு சக்தி வாய்ந்ததாக அமையவுள்ளது. இதன்மூலம் பிரபஞ்சம் பற்றி மேலும் பல ரகசியங்களை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு அருகில் நிலத்திற்குக் கீழ் அமைக்கப்பட்டுள்ளது மோதுவியின் இரு பக்கங்களாலும் உயர் ஆற்ற துகள் ஒளியின் வேகத்திற்கு நெருக்கமாக செலுத்தி அதனை மோதவிடுவதன் மூலம் புதிய துகள்களை கண்டறிய முயற்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றி புரிதலை பெற உதவும்.

இங்கு தற்போதுள்ள 27 கிலோ மீற்றர் நீளம் கொண்ட மோதுவி குழாய் மூலம் 2012 ஆம் ஆண்டு முக்கிய கண்டுபிடிப்பாக கடவுள் துகள் என அறியப்படும் ஹிக்ஸ் போஸான் உபவணு கண்டுபிக்கப்பட்டது.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை