அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத கடும் வெப்பநிலை

அவுஸ்திரேலியாவில் வீசும் அனல் காற்றால் சில பகுதிகளில் வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்சியஸை எட்டியிருப்பதாக வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த நான்கு நாட்களில் சராசரி அளவைக் காட்டிலும் அங்கு வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் சராசரி அளவைக் காட்டிலும் 10 முதல் 15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

அடிலெய்ட், சிட்னியின் மேற்குப் பகுதி, நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சில வட்டாரங்கள், விக்டோரியா மாநிலம் ஆகியவை பெரும் அபாயத்தில் இருப்பதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

தலைநகர் கன்பரா தொடர்ந்து ஐந்தாண்டாகக் கடும் அனல் காற்றால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

இவ்வார இறுதியில் சிட்னியும் பாதிக்கப்படும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை